×

மரவள்ளியில் செம்பேன் தாக்குதல் தடுக்க பயிற்சி

 

மோகனூர், ஜூலை 11: மோகனூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் பால் ஜாஸ்மின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மோகனூர் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி பயிர்களில், செம்பேன் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வு முகாம், நேற்று (10ம் தேதி) புஞ்சை இடையார் கீழ்முகம், ஒருவந்தூர், அணியாபுரம் பகுதியில் நடந்தது. நாளை (12ம் தேதி) சின்னபெத்தாம்பட்டி, 13ம் தேதி ஆரியூர், வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, மணப்பள்ளியிலும், 17ம் தேதி ஆண்டாபுரம், அரசநத்தம், 19ம் தேதி லத்துவாடி, பெரமாண்டம்பாளையத்திலும், 21ம் தேதி எஸ்.வாழவந்தியிலும், 24ம் தேதி குட்லாம்பாறையிலும், 27ம் தேதி மாடகாசம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் காலை 11 மணியளவில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் அப்பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு, செம்பேன் தாக்குதலிருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மரவள்ளியில் செம்பேன் தாக்குதல் தடுக்க பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Semban ,Maravalli ,Mohanur ,Paul Jasmin ,
× RELATED தண்ணீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு